வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இரட்டை இலை சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ் குறுக்குவழியில் முயற்சி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் குறுக்கு வழியில் முயற்சித்து வருவதாக, அதிமுக (அம்மா)

News image
Updated On :2 நவம்பர் 2017, 8:27 pm

DIN

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் குறுக்கு வழியில் முயற்சித்து வருவதாக, அதிமுக (அம்மா) அணியின் துணை பொதுச்செயலர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். 
திருச்சிக்கு வியாழக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக செயல்படுவதைப் போன்று மழை நிவாரணம், வெள்ளத் தடுப்பு பணிகளிலும் தமிழக அரசு உரிய அக்கறை செலுத்துவதில்லை. தினந்தோறும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் முடக்குவதற்கு காரணமாக இருந்த துணை முதல்வரையும், மறைந்த முதல்வர் ஜெயலிலதா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறி, மக்கள் நலனை மறந்து செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மாற்ற வேண்டும் என எங்களது தரப்பு எம்எல்ஏக்கள் கோரினர். இப்போது, ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியையே அகற்றிவிட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமல்படுத்துவதற்காக தொடர்ந்து போராடி வருகிறோம். எங்களது நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமாகவே அமைந்துள்ளது. ஆனால், முதல்வர், துணை முதல்வர் நடவடிக்கைகள் அனைத்தும் குறுக்கு வழியில் அமைந்துள்ளன. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களது தரப்புக்கு சட்டப்பூர்வமாகப் பெறுவோம் என்றார் அவர்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
மன்னார்குடி, நாகையில் ஓ.என்.ஜி.சி. நடவடிக்கையால் நிலத்தடி நீர் உப்பு நீராகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளைப் பாதுகாக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிதாகச் சோதனை செய்வதாக இருந்தால் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தஞ்சாவூர் மாவட்ட மக்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.