

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இந்த விழாவினையொட்டி, நவம்பர் 23 ஆம் தேதி வாஸ்துசாந்தி நடைபெற்று, 24 ஆம் தேதி காலை 9.30 மணியிலிருந்து 10 மணிக்குள் கம்பத்தடி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை முன்னிலையில் கொடியேற்றம் நடைபெறுகிறது.
விழாவினை முன்னிட்டு, சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளிபாலிப்பார்.
டிசம்பர் 1 ஆம் தேதி 8 ஆம் நாள் திருவிழாவாக மாலை 6.30 மணியிலிருந்து 6.45 மணிக்குள் பட்டாபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 2 ஆம் தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும்.
விழா ஏற்பாடுகளை, கோயில் துணை ஆணையர் ப. கவிதா பிரியதர்சினி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.