ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே விபத்து நேரிட்ட காருக்குள் மரகதலிங்க சிலை: போலீஸார் கைப்பற்றி விசாரணை

விராலிமலை அருகே இன்று நேரிட்ட சாலை விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட மரகத லிங்கத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :6 அக்டோபர் 2017, 5:27 am

சி. உதயகுமார்

விராலிமலை அருகே இன்று நேரிட்ட சாலை விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட மரகத லிங்கத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை- திருச்சி நான்கு வழிச்சாலை அருகேயுள்ள கொண்டமநாயக்கன் பட்டி பிரிவு அருகே மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று திருச்சியிலுருந்து விராலிமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. 

Story image

இதில் காரில் பயணம் செய்த 4 பேர் பலத்தகாயமடைந்து சுயநினைவை இழந்தனர். அதனைத்தொடர்ந்து விபத்து குறித்து அறிந்த விராலிமலை காவல்துறையினர் நிகழ்விடம் சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் போலீஸார் காரை சோதனையிட்டபோது 8 கிலோ மதிப்புடைய மரகதலிங்க சிலை காருக்குள் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து சிலையை கைப்பற்றிய போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.