அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது: எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன்

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 5:45 am

தினமணி

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நிறைவேறினால் நல்லது என்று டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் இன்று 11 வது  நாளாக  டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நடை பயிற்சி மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எங்கள் அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது கூறியுள்ளார். அவர் சொன்னது உண்மை என்றும், நாங்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். திமுக தரப்பில் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 

இவை இரண்டில் எது நடந்தாலும் நல்லது என தெரிவித்த அவர், நாளைக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், எங்கள் அணியில் உள்ளவர்கள் எதிர் அணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தர்த்தனர். ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் எங்கள் அணியில் உள்ளவர்கள் அங்கு செல்லவில்லை. எங்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் இறுக்கிறது. எங்களுடைய இறுதியான நிலைபாட்டை அவர்கள் புரிந்துகொண்டனர். இதற்கு மேலும் நல்ல முடிவை எடுக்கவில்லை என்றால் அது எல்லோருக்கும் ஆபத்து என தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.