விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அனிதா தற்கொலை: ரஜினி இரங்கல்

விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா என்னவெல்லாம் நினைத்தாரோ?

News image
Updated On :1 செப்டம்பர் 2017, 12:52 pm

எழில்

மாணவி அனிதாவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய தமிழக மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ட்விட்டரில் ரஜினி தெரிவித்ததாவது:

மாணவி அனிதாவின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அனிதாவின் மரணத்தால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது.

விபரீத முடிவை எடுக்கும் முன்பு அனிதா என்னவெல்லாம் நினைத்தாரோ? அனிதாவின் குடும்பத்துக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.