நீட் விவகாரம்: திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
நீட் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நீட் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டதிற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் துவங்கியது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் சார்பாக ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முத்தரசன் மற்றும் ராமசாமி, கலிபூங்குன்றன், ரவிக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் பின்வருமாறு:
1. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு அனைத்துக் கட்சிகள் சார்பாக அஞ்சலி.
2.நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காத மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்.
3. கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றுதல்
4.நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதாக முதலில் கூறி விட்டு பின்னர் அதனை செய்யாமல் ஏமாற்றிய மத்திய அரசுகக்கு கண்டனம்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக்கு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...