தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 பேர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
எம்எல்ஏக்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சென்னை: எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சார்பில் வழக்குரைஞர் பி.ஆர். ராமன் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்ய அனுமதி அளித்த நீதிபதி துரைசாமி, ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து நாளை விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.
18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகரின் உத்தரவை செல்லாது என்று அறிவிக்கக் கோரி 18 பேர் சார்பாக வழக்குரைஞர் பி.ஆர். ராமன் உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தார்.
அதிமுகவில் இருந்து விலகாமல், வேறு கட்சியிலும் சேராத நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பாக தமிழ் செய்தித் தொலைக்காட்சியில் பேசிய முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம், இந்த வழக்கில் உடனடியாக இடைக்காலத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட மாட்டாது என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...