தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரி நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் உத்தரவு

புதுச்சேரி நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

News image
Updated On :30 மார்ச் 2017, 8:18 am

தினமணி

புதுச்சேரி நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி நகராட்சி ஆணையர் மீது பாஸ்கர் எம்.எல்.ஏ. அளித்த உரிமை மீறல் பிரச்னை தொடர்பான விவாதம் பேரவையில் இன்று நடந்தது. 
அதில் பங்கேற்று பேசியவர்கள் பேச்சு விவரம்:

முதல்வர் நாராயணசாமி: குறிப்பாக எந்த அரசு விழாவாக இருந்தாலும், நானும், அமைச்சர்களும் பங்கேற்றால் தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு தெரிவித்துவிட்டு, அழைப்பிதழ் அளித்து விட்டு தான் செல்வோம். இடையில் சில காலம் இந்நடைமுறை பின்பற்றப்படவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் அதை கடைபிடித்து வருகிறோம். துணைநிலை ஆளுநர் சுதானா நகரில் மக்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்பகுதி மக்களை அழைத்து அதிகாரியிடம் கூட்டத்தை கூட்டுமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவர் எம்.எல்.ஏவிடம் தகவல் தெரிவிக்கவில்லை. பொதுமக்களுக்கு சேவை புரியும் போது அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எம்.எல்.ஏ. தனது உரிமையை கேட்டது தவறில்லை. அப்பகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ தான் பதில் தரும் நிலையில் உள்ளார்.

நானும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினோம். அவரும் அதை ஏற்றார். ஆனால் பின்னர் அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் பாஸ்கர் எம்.எல்.ஏ. நகராட்சி ஆணையர் மீது உரிமை மீறல் பிரச்னை தந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் துறையின் இயக்குநர், செயலாளர், தலைமைச் செயலாளர், அமைச்சர், ஆகியோர் உள்ளனர். ஆளுநர் உத்தரவு தொடர்பாக இவர்களுக்கு தகவல் தெரிவிக்காமலேயே ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். 

இப்பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏக்கள் பேசியுள்ளனர். பேரவைத் தலைவர் எடுக்கும் முடிவுக்கும் அரசு கட்டுப்படும்.

பேரவைத் தலைவர்: பிரச்னைக்கு காரணமான அதிகாரி தனக்கு மேல் பொறுப்பு வகித்து வருவரை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு செயல்படுவதை ஏற்க முடியாது. ஆளுநர் கூறியபடி செயல்பட்டாலும் அதை விதிகளின்படி செயல்பட வேண்டும்.

நகராட்சியாக இருந்தாலும், பஞ்சாயத்தாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏக்களும் அவற்றில் உறுப்பினர்களாக உள்ளனர். அவற்றில் இணை உறுப்பினர்களாக உள்ளனர். விவாதத்திலும் எம்.எல்.ஏக்களும் பங்கேற்கலாம்.

எனவே நகராட்சி ஆணையர் அவர்களுக்கு உரிய மரியாதையை தந்திருக்க வேண்டும்.

கூட்டம் நடத்துமாறு ஆளுநர் கூறியுள்ளார். நீங்கள் கூட்டத்துக்கு வர வேண்டும் என அழைத்திருக்க வேண்டும். எம்.எல்.ஏக்களுக்கு அப்பதவியில் இருந்து நகராட்சி ஆணையரை மாற்ற வேண்டும். புதிய அதிகாரியை அங்கு நியமிக்க வேண்டும். சட்டத்தை மதிக்காமல் செயல்படும் அதிகாரியை வன்மையாக பேரவைக் கண்டிக்கிறது. உரிமை மீறல் குழுவின் தலைவரான பேரவை துணைத் தலைவர் இதில் முடிவெடுப்பார். உரிமைக்குழு முன்பு வந்து ஆணையர் தனது விளக்கத்தை அளிக்கலாம். பொய்ப்புகாரை ஆணையர் அளிக்க்ககூடாது. 

நகராட்சி நிதி பொதுமக்கள் வரிப்பணமாகும். பேரவையின் அதிகாரத்தை நிலைநிறுத்துவேன்.

லட்சுமி நாராயணன்: மேலதிகாரிகளை கேட்காமலேயே ஆணையர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறைக்கு இதுதொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும்.

அன்பழகன்: நகராட்சி ஆணையரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும்.

நிதியிழப்புக்கு ஆளுநரும் காரணமாக உள்ளார். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

பேரவைத் தலைவர்: துறைமுக முகத்துவாரம் பிரச்னை, தூர்வாருதல் தொடர்பான கோப்புகளை பேரவை முன்பு துறை அமைச்சர் வைக்க வேண்டும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.