சென்னை: பிரதமர் மோடிக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வரும் 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக , அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு அன்று கருப்பு சட்டை அணிய வேண்டும் என்றும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதேசமயம் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று திங்களன்று விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரியுள்ளார். அது அவரது சொந்த கருத்தாக இருந்தாலும் அவர் கூறியதன் பொருள் இதுதான்.
பொதுவாக இந்தியா விவசாயத்தையும் விவசாயிகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு நாடு. தமிழகத்திற்கும் அடிப்படை விவசாயம்தான். எனவே பிரதமர் மோடி காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் மூலம் விவசாயிகளுக்கு நீர் வழங்க வேண்டியதை நினைவுறுத்தும் வகையில் பச்சைக் கொடி காட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


