குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இளையான்குடி அருகே ரூ. 50 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட 2 சிறுவர்கள் மீட்பு: ஒருவர் கைது

இளையான்குடி அருகே கொத்தடிமையாக ஆடு மேய்க்க விற்கப்பட்ட 2 சிறுவர்களை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் புதன்கிழமை மீட்டனர். 

News image

மீட்கப்பட்ட சகோதரர்கள் தங்கப்பாண்டியன், ஈஸ்வரன்

Updated On :19 ஏப்ரல் 2018, 2:02 am IST

இளையான்குடி அருகே கொத்தடிமையாக ஆடு மேய்க்க விற்கப்பட்ட 2 சிறுவர்களை குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் புதன்கிழமை மீட்டனர். 
இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலைச் சேர்ந்தவர் அங்குச்சாமி. ஆட்டுக்கிடை அமைப்பாளர். இவரது மகன் ஆனந்தகுமார், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அம்பனிசத்திரம் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கொடுத்து, அவரது மகன்கள் தங்கப்பாண்டியன் (7), ஈஸ்வரன் (5) ஆகிய இருவரையும் காளையார்கோயிலுக்கு கூட்டி வந்துள்ளார். பின்னர், இச்சிறுவர்களை இளையான்குடி அருகே விளங்குளம் கிராமத்தில் செம்மறி ஆட்டுக்கிடை அமைத்து அங்கு ஆடு மேய்க்க விட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் லதாவுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், இளையான்குடி வட்டாட்சியர் கண்ணதாசன், சைல்டு லைன் குழுவைச் சேர்ந்த ரசீந்திரக்குமார் ஆகியோர் விளங்குடி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள், அங்குச்சாமியும், ஆனந்தகுமாரும் 2 சிறுவர்களை விலைக்கு வாங்கி வந்து ஆடுகள் மேய்க்க விட்டிருக்கும் தகவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், விசாரணை குழுவினர் வந்திருக்கும் தகவலை அறிந்த அங்குச்சாமி, ஆனந்தகுமார் இருவரும் சிறுவர்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்தனர். பின்னர், ஆனந்தகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்நிலையில், விசாரணைக் குழுவினர் மறைத்து வைக்கப்பட்ட சிறுவர்களை மீட்டனர். 
இச்சம்பவம் குறித்து இளையான்குடி போலீஸார், அங்குச்சாமி, ஆனந்தகுமார், சிறுவர்களின் தந்தை ராஜேந்திரன் ஆகியோர் மீது கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். பின்னர், அங்குச்சாமியை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.