முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

வஉசி துறைமுகத்துக்கு ரூ. 622 கோடி வருவாய்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 622.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News image

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பல்கள்.

Updated On :19 ஏப்ரல் 2018, 12:58 am IST

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூ. 622.75 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ஐ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி வஉசி துறைமுகம் கடந்த 2017 -18 நிதியாண்டில் 365.83 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2016 -17 நிதியாண்டில் கையாளப்பட்ட 384.63 லட்சம் டன் சரக்குகளைவிட தற்போது 4.89 சதவீதம் குறைவாகவே சரக்கு கையாளப்பட்டுள்ளது. இறக்குமதியை பொருத்தவரையில் 261.71 லட்சம் டன்களும், ஏற்றுமதியை பொருத்தவரையில் 104.12 லட்சம் டன்களும் கையாளப்பட்டுள்ளது.
மேலும், 2017-18 நிதியாண்டில் 6.97 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையானது, கடந்த நிதியாண்டில் கையாண்ட 6.42 லட்சம் சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில் 8.65 சதவீதம் கூடுதலாகும். 
கப்பல்கள் தளத்துக்காக காத்திருக்கும் சராசரி நேரமானது, 2017 -18 நிதியாண்டில் 1.27 நாள்களாக குறைந்துள்ளது. கப்பல் காத்திருக்கும் இடத்தில் இருந்து தளத்துக்கு வந்து சரக்கு கையாண்டு வெளியே செல்லும் வரை உள்ள சராசரி கால அளவு 2017-18 நிதியாண்டில் 2.69 நாள்களாக குறைந்துள்ளது.
2017-18 நிதியாண்டில் துறைமுகத்தின் இயக்க வருவாய் ரூ. 622.75 கோடி ஆகும். அதற்கு முந்தைய நிதியாண்டின் இயக்க வருவாய் ரூ. 597.93 கோடி ஆகும். 2017-18 நிதியாண்டு இயக்க உபரி வருவாய் ரூ. 372.56 கோடி ஆகும். அதற்கு முந்தைய நிதியாண்டில் இயக்க உபரி வருவாய் ரூ. 350.02 கோடி என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.