தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கருவில் பாலினத்தை கண்டறிந்தால் 3 ஆண்டு சிறை: சுகாதாரத் துறை எச்சரிக்கை

கருவில் பாலினத்தைக் கண்டறியும் கர்ப்பிணிகளின் உடன் செல்லும் உறவினர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 8:01 pm

DIN

கருவில் பாலினத்தைக் கண்டறியும் கர்ப்பிணிகளின் உடன் செல்லும் உறவினர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கடலுôர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக ஊரக மருத்துவ சேவை இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட பிரத்யேகக் குழுவினர் மாநிலம் முழுவதும் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் ஆய்வு செய்கின்றனர்.
இக்குழுவினர் அண்மையில் திருவண்ணாமலை, சேலம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதன் மூலம் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து ஆந்திரத்துக்கு கருவில் உள்ள பாலினத்தைக் கண்டறியச் செல்வதும் கண்டறிப்பட்டு, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட ஸ்கேன் பரிசோதனை மையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 
இருப்பினும் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு 
செய்வது தொடர்ந்து வருகிறது என்றும் அதனைத் தடுக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக ஊரக மருத்துவ சேவை இயக்கக அதிகாரிகள் கூறியது: பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழித்து, ஆண் குழந்தைகளை மட்டுமே பெற வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். இதனால் தமிழகத்தில் தற்போதுள்ள ஆயிரம் குழந்தைகளுக்கு 964 பெண் குழந்தைகள் என்ற விகிதம் மேலும் குறையும் அபாயம் உள்ளது. கருவில் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பில் 
ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கருக்கலைப்பு செய்வது சட்டப்படி சரியானதுதான். ஆனால், பாலினம் அறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றம். 
இதுபோன்ற செயல்களை வற்புறுத்தும் மற்றும் அவர்களை பாலினத்தைக் கண்டறிய அழைத்து வரும் கர்ப்பிணியின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். பாலினத்தைப் பரிசோதித்துத் தெரிவிக்கும் ஸ்கேன் பரிசோதனை மையங்களுக்கும், பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.