சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரி சந்தானத்திற்கு மேலும் இரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அலைபேசி மூலம் பாலியல் வலை விரித்த பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.
அதேசமயம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்தார்.
மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளார்.
விசாரணை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிந்த நிலையில், சந்தானம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் கார் குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

சூர்யாவின் கருப்பு பட தெலுங்கு டைட்டில் அறிவிப்பு!
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |

கேமரூன் கிரீன் பந்துவீசவில்லையென்றால் கேகேஆர் என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


