தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்க தேர்தல் ரத்து

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:17 pm

DIN

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், 'உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு வரும் மே 7 -ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் 4,392 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 -ஆம் தேதி முதல் ஜூன் 3 -ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வழக்குரைஞர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தேர்தல் நடந்தால் உறுப்பினர்களாக உள்ள வழக்குரைஞர்கள் பலர் வாக்களிக்க முடியாது. எனவே, இந்தத் தேர்தலை ஜூன் 4 -ஆம் தேதிக்குப் பிறகு நடத்த வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால் இந்த மனுவை இதுநாள் வரை பரிசீலிக்கவில்லை' என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து கோரிக்கையை பரிசீலித்த ஆணையர், சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு வரும் 7 -ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.