அகில இந்திய கலந்தாய்வில் பெற்ற இடங்களைக் கைவிட திங்கள்கிழமை (ஆக.6) கடைசி நாளாகும்.
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட அகில இந்திய கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் சென்று சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் தங்கள் இடங்களை ஆக. 6-ஆம் தேதிக்குள் கைவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அகில இந்திய முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று கல்லூரியில் சேர்ந்தவர்கள் தங்கள் இடத்தைக் கைவிட நினைத்தால், கல்லூரி நிர்வாகத்தை அணுக வேண்டும். கல்லூரிகளில் இடங்களைக் கைவிடுவதற்கான இணையதள வசதியைப் பயன்படுத்தி ஆக.6-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் தங்கள் இடங்களைக் கைவிட வேண்டும்.
முதல் கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்று கல்லூரியில் சேராதவர்கள் இடங்களைக் கைவிடும் நடைமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








