பிஎஸ்என்எல் தமிழகப் பிரிவு தலைமைப் பொது மேலாளராக வி.ராஜு புதன்கிழமை பொறுப்பேற்றார். பிஎஸ்என்எல் தமிழகப் பிரிவு தலைமைப் பொது மேலாளராக இருந்த ஆர்.மார்ஷல் ஆண்டனி லியோ கடந்த 31-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு வி.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், இந்திய அரசின் தொலைத்தொடர்பு சேவைப் பணியில் கடந்த 1983-ஆம் ஆண்டு சேர்ந்தார். இதற்கு முன்பு, திருச்சி, குவாஹாட்டியில் முதன்மைப் பொது மேலாளாராகவும், அந்தமான் நிகோபார் தீவுகளில் தலைமைப் பொது மேலாளராகவும், திருநெல்வேலியில் பொது மேலாளராகவும், தில்லி பிஎஸ்என்எல் கார்ப்பரேட் அலுவலகத்தில் இணை துணைத் தலைமை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். வி.ராஜு, சென்னைப் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் பி.எஸ்சி பட்டமும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் மின்னணு பொறியியலில் பி.டெக் பட்டமும், ஹைதராபாத் ஜேஎன்டி பல்கலைக் கழகத்தில் டிஜிட்டல் சிஸ்டம்ஸ் மற்றும் கணினி பொறியியல் பிரிவில் எம்.டெக் பட்டமும் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

’ஹா் கா் திரங்கா’ இயக்கம்: சுயஉதவிக் குழுக்களிடமிருந்து 2 லட்சம் மூவா்ணக் கொடிகள் தில்லி அரசு கொள்முதல்
‘தில்லி லட்சுமி யோஜனா’ திட்டத்தில் ரூ.1,000 மட்டுமே ரொக்கமாக கிடைக்கும்!

பிரதானை பதவி நீக்கம் செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: சிசோடியா







