சென்னை: தமிழகத்தின் மாவட்டங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையானது தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் மாவட்டங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சற்று முன்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு மாவட்ட காவல்துறையிலும் அனைத்து ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தின் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் பாதுகாப்பினை போதிய அளவு பலப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு பணிகளுக்கு என்று போதுமான எண்ணிக்கையிலான காவலர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


