இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்த சுஜாதா குமார்(54), புற்றுநோய் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு மரணமடைந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுஜாதா குமாரின் உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மிகவும் உடல்நலம் குன்றிய அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்', என்று சுஜாதாவின் தங்கையும், நடிகையுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி சுட்டுரையில் பதிவிட்டார்.
சுஜாதா குமார், தனுஷ் நடித்த ராஞ்சனா' உள்ளிட்ட படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







