முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தொழிற்பயிற்சிக்காக வேலூர் சிறையிலிருந்து 15 கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றம்

தொழில் பயிற்சி படிப்புக்காக வேலூர் மத்திய சிறையிலிருந்து 15 கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கைதிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம்

Updated On :21 ஆகஸ்ட் 2018, 2:00 am IST


தொழில் பயிற்சி படிப்புக்காக வேலூர் மத்திய சிறையிலிருந்து 15 கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றப் பட்டுள்ளனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கைதிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ) தொடங்கப்பட்டது. 
இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், கணினி ஆபரேட்டர், எலெக்ட்ரீசியன், டெய்லர், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆண்டுக்கு 168 கைதிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதற்காக தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் இருந்தும் தகுதியுடைய கைதிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, தொழில் பயிற்சிக்காக வேலூர் மத்திய சிறையிலிருந்து 15 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு, திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில், 11 பேருக்கு வெல்டிங், 2 பேருக்கு எலெக்ட்ரீசியன், 2 பேருக்கு டெய்லரிங் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
வேலூர் மத்திய சிறையில் தற்போது 26 கைதிகள் 10 -ஆம் வகுப்பும், 13 பேர் பிளஸ் 1-வகுப்பும், 15 பேர் பிளஸ் 2-வகுப்பும், பி.ஏ அரசியல் அறிவியல் படிப்பை 3 பேரும், எம்.ஏ. அரசியல் அறிவியல் படிப்பை ஒருவரும், ஊட்டச்சத்து பட்டப்படிப்பு 18 பேரும் என மொத்தம் 80 கைதிகள் படித்து வருகின்றனர். அவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க தேவையான வசதிகள் சிறையில் செய்து தரப்பட்டுள்ளது என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பின் (பொறுப்பு) முருகேசன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.