நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

புதுவையில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11.2 சதவீதமாக குறைந்தது: ஆய்வறிக்கையில் தகவல்

புதுவையில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 15.1 சதவீதத்தில் இருந்து 11.2 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

புதுவையில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 15.1 சதவீதத்தில் இருந்து 11.2 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
 டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ், மத்திய அரசின் சுகாதார மற்றும் நல அமைச்சகம் ஆகியவை இணைந்து புகையிலை பயன்பாடு குறித்து கணக்கெடுப்பை (ஜிஏடிஎஸ்) அண்மையில் நடத்தியது.
 இந்த கணக்கெடுப்பானது 30 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் 15 வயதுடையோர் மற்றும் அதற்கு மேற்பட்டோரிடம் வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்டது.
 முதல் சுற்று ஆய்வு 2009 ஜூன், 2010 ஜனவரி இடையே நடத்தப்பட்டது. இரண்டாவது சுற்று ஆய்வு 2016 ஆகஸ்ட் 2017 பிப்ரவரிக்கும் இடையே நடத்தப்பட்டது.
 அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் 945 ஆண்களும், 1,529 பெண்களிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்த அறிக்கையின் முடிவு வெயீட்டு விழா ஜிப்மர் மருத்துவமனை அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
 ஜிப்மர் பிஎஸ்எம் துறைத் தலைவர் சோனாலி சர்கார் வரவேற்றார். புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் டீன் சுந்தரராமன் ஆகியோர் புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பின் முடிவை வெளியிட்டனர்.
 நிகழ்ச்சியில் ஜிப்மர் இயக்குநர் விவேகானந்தம், மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன், ஜிப்மர் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் சித்தான்ஷு சேகர், ஸ்வஸ்திச்
 சரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சுகாதாரத் துறை இயக்குநர் ராமன் பேசுகையில், புதுவை மாநிலத்தில் கிராமப் பகுதியில் புகையிலையின் பயன்பாடு நகரத்தைவிட அதிகமாக உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட சுகாதாரத்துறை மூலம் விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
 ஜிஏடிஎஸ்-2 அறிக்கையின்படி ஜிஏடிஎஸ்-1ஐ காட்டிலும் புகைக்கும் வகை புகையிலையின் பாதிப்பு 3.1 சதவீதமும், மெல்லும் வகை புகையிலையின் பாதிப்பு 1.4 சதவிதமும் குறைந்துள்ளது.
 ஏதேனும் ஒரு வகை புகையிலை பயன்பாடு கணிசமாக 3.9 சதவீதம், ஜிஏடிஎஸ் 1-ல் 15.1 சதவீதத்தில் இருந்து ஜிஏடிஎஸ்-2ல் 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.
 இதில் முதல் ஆய்வைப் போலவே இரண்டாவது ஆய்விலும் 15 முதல் 17 வயதுக்கு உள்பட்ட நபர் புகைபிடிப்பதைப் பற்றி தெரியப்படுத்தப்படவில்லை.
 புகையிலை பயன்படுத்துபவரின் சராசரி வயது விகிதம் 18 வயதில் இருந்து 19.3 வயதாக உயர்ந்துள்ளது. மேலும், 14.7 சதவீத ஆண்களும், 0.1 சதவீத பெண்களும் மற்றும் 7.2 வயது வந்தோரும் தற்போது புகைக்கும் வகை புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
 4.5 சதவீத ஆண்களும் 4.9 சதவீத பெண்களும் மற்றும் 4.7 சதவீத வயது வந்தோரும், தற்போது மெல்லும் வகை புகையிலையை பயன்படுத்கின்றனர்.
 17.7 சதவீத ஆண்களும், 5.1 சதவீத பெண்களும் மற்றும் 11.2 சதவீத வயது வந்தோரும் தற்போது புகைக்கும் அல்லது மெல்லும் வகை புகையிலையில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.
 5.2 சதவீத வயதுவந்தோர் சிகரெட்டையும் 3.4 சதவீதம் பேர் வெற்றியிலையோடு மெல்லும் புகையிலையையும் பயன்படுத்துகின்றனர்.
 மேலும், புகைப்பவரின் அருகே பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை புதுவை யூனியன் பிரதேசத்தில் மிகவும் குறைந்துள்ளது.
 பொது இடங்களில் அருகாமை புகையினால் பாதிக்கப்படும் வயதுவந்தோரின் எண்ணிக்கை 27.1 சதவீதத்தில் இருந்து 16.1 சதவீதமாகவும், வீட்டினுள் அருகாமை புகையினால் பாதிகக்கப்படுவோரின் எண்ணிக்கை 2009-10ல் 10.1 சதவீதத்தில் இருந்து 2016-17ல் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது மற்றும் வேலையிடங்களில் 27.9 சதவீதத்தில் இருந்து 25.3 சதவீதமாக குறைந்துள்ளது.
 சிகரெட் பெட்டிகளில் அச்சிடப்படும் எச்சரிக்கை படங்கள் மற்றும் வெவ்வேறு ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் 51 சதவீதம் புகைபிடிப்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.
 ஜிஏடிஎஸ்-2 அறிக்கையில் தற்போது புகையிலை பயன்பாட்டினை விட்டுவிட முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை 2009-10ஐ காட்டிலும் தற்போது சற்று உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.