தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து அறிவிப்பு  

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 8-ம் தேதி இரவு 11.30 முதல் 9-ம்தேதி காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :7 டிசம்பர் 2018, 2:32 pm

DIN

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் 8-ம் தேதி இரவு 11.30 முதல் 9-ம்தேதி காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாளை( 8-ம்தேதி) இரவு 11.30 முதல் மறுநாள் (9-ம்தேதி) காலை 5.30 வரை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

இந்த குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும், செங்கல்பட்டிலிருந்து கடற்கரை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.