குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

தமிழக காவல் துறைக்கு 27 டி.எஸ்.பி.க்கள் நியமனம்

தமிழக காவல்துறைக்கு புதிதாக 27 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


தமிழக காவல்துறைக்கு புதிதாக 27 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் (டி.எஸ்.பி.) புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.
தமிழக காவல்துறையில் காலியாக இருந்த டி.எஸ்.பி.க்கள் பணியிடத்தை நிரப்பும் வகையில், புதிதாக 27 டி.எஸ்.பி.க்கள் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு காவல் பயிற்சி மையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது. 6 மாதங்களுக்கு முன்பு 27 பேரும், பல்வேறு மாவட்டங்களில் பயிற்சி டி.எஸ்.பி.களாக நியமிக்கப்பட்டனர்.
இங்கு அனைத்து வகை பயிற்சிகளையும் நிறைவு செய்த இந்த 27 டி.எஸ்.பி.க்களை, காலிப் பணியிடங்களில் நியமனம் செய்து தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதன்படி டி.எஸ்.பி.க்கள் கே.வெள்ளத்துரை- மயிலாடுதுறை, பி.பாலகிருஷ்ணன்- வேலூர், இ.சதீஷ்குமார்- நெல்லை நகரம், ஜெ.கல்பனா தத்- கும்மிடிப்பூண்டி, எம்.வி.அஜய் தங்கம்- கோட்டகுப்பம், ஆர்.கோகுலகிருஷ்ணன்-தென்காசி, எஸ்.எஸ்.வினோதினி- செஞ்சி, டி.ராஜேஷ்-முதுகளத்தூர், எஸ்.புகழேந்தி கணேஷ்- திருவாடானை, ஆர்.சார்மு- மணப்பாறை, எஸ்.வினோத்-திண்டுக்கல், பி.மணிகண்டன்-திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட் உள்பட 27 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 டிஎஸ்பிக்கள் பணியிடமாற்றம்: தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிர்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாலும் காவல்துறையில் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, மாநிலம் முழுவதும் 8 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதில் கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பி எம்.செல்வம் காங்கேயத்துக்கும், காங்கேயம் டிஎஸ்பி ஆர்.கிருஷ்ணசாமி கோபிசெட்டிபாளையத்துக்கும் பணியிட மாற்றம் 
செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 8 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.