ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :21 டிசம்பர் 2018, 2:38 pm

DIN

மதுரை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம்  தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று அறிவித்ததோடு, ஆலையைத் திறக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
  
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஜனவரி 21-ந்தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.