மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பட்டப்பகலில் மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட கிளி ஜோதிடர்: பெண் வசியம் காரணமா? 

திருப்பூரில் பட்டப்பகலில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் கிளி ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :24 டிசம்பர் 2018, 10:58 am

DIN

திருப்பூர்: திருப்பூரில் பட்டப்பகலில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் கிளி ஜோதிடர் ஒருவர் மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் குமரன் ரோட்டின் அருகில் பின்னி காம்பவுண்ட் ரோட்டில் உள்ள பூங்காவில் ரமேஷ் என்பவர் கிளி ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திங்கள் காலை அவர் அந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, ஹெல்மெட் அணிந்த மர்மநபர் ஒருவர் நீண்ட அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றிருக்கிறார்.  

இந்த கொடூர கொலைக்காட்சியானது அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த கொலைகாரன் ரமேஷை சரமாரியாக வெட்டிய காட்சிகள் காமிராவில் பதிவாகியுள்ளது. . 

கொலை செய்த பின்னர் மர்ம நபர் அங்கு வீசி விட்டுச் சென்ற துண்டு பிரசுரங்களில், பூங்காவுக்கு வரும்  பெண்களை ரமேஷ் வசியம் செய்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர்  பாலியல் ரீதியாக அவர்களைத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது  

தகவலறிந்து விரைந்து வந்த போலீசாரால் ரமேஷின் உடல் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.