தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுவதால், தென் தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
காற்றழுத்தத் தாழ்வுநிலை: தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை திங்கள்கிழமை உருவாகியது. இது தற்போது தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன்காரணமாக, தென்தமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச. 26) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட காலநிலை காணப்படும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






