டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேருந்துக் கட்டண உயர்வு: திமுக தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. பேருந்துக் கட்டணத்தை

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 8:25 pm

DIN

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. பேருந்துக் கட்டணத்தை ரூ.3 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு திடீரென உயர்த்தியதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டன. அதைத் தொடர்ந்து தமிழக அரசு கட்டண குறைப்பு அறிவிப்பையும் வெளியிட்டது. 
ஆனால், சொற்ப அளவிலேயே தமிழக அரசு கட்டணத்தைக் குறைத்து இருப்பதாகவும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்க உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.