பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
சிவாலய ஓட்டத்தை மேற்கொண்டுள்ள பக்தர்கள்.
Updated On :12 பிப்ரவரி 2018, 7:30 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
சிவராத்திரி தினத்தையொட்டி, முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, திருப்பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிகோடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர். 110 கி.மீ. தொலைவு கொண்ட இந்தப் பயணத்தில் குமரி மாவட்டம் மட்டுமன்றி, கேரளத்திலிருந்தும் பக்தர்கள் ஓடியும், நடந்தும், வாகனங்களிலுமாக பங்கேற்கின்றனர்.
ஓட்டத்தைத் தொடங்கிய பக்தர்கள்: சிறப்புமிக்க இந்த சிவாலய ஓட்டம் திங்கள்கிழமை பிற்பகலில் முன்சிறை மகாதேவர் கோயிலில் தொடங்கியது. பக்தர்கள் இக்கோயிலில் மகாதேவரை தரிசித்துவிட்டு, கோபாலா... கோவிந்தா.... என நாம கோஷங்களை சொல்லியவாறு ஓட்டத்தில் ஈடுபட்டனர்.
இருசக்கர வாகனங்கள்கள் மற்றும் கார், வேன், ஆம்னி பேருந்துகளில் சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: சிவாலய ஓட்டத்தில் ஈடுபடும் பக்தர்களின் வசதிக்காக அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் இலவச உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களை அச்சுறுத்தும் சாலைகள்: சிவாலய ஓட்டப் பாதையில் உள்ள சாலைகளில் பெரும்பாலானவை சேதமடைந்து கிடப்பதால் இச்சாலைகளிலிருந்து தொடர்ந்து புழுதிப் படலம் கிளம்பிக் கொண்டேயிருக்கிறது. மேலும், சாலையில் உள்ள குழிகள் பக்தர்களுக்கு பெரும் சிரமத்தை அளிப்பதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.