சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய விரத சாஹு: ஆணையம் ஒப்புதல்

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய விரத சாஹூ வை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 11:04 pm

DIN

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய விரத சாஹூ வை நியமிக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
"தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும்' என்று தமிழக அரசுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து, தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படக்கூ டிய அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசிடம் இந்திய தேர்தல் ஆணையம் கோரியது. சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சத்ய விரத சாஹூ உட்பட 3 அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு ஏற்கெனவே அனுப்பி வைத்தது.
இந்த நிலையில், சத்ய விரத சாஹூவை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்தும், ராஜேஷ் லக்கானியை அந்தப் பதவியில் இருந்து விடுவித்தும் உத்தரவிடும்படி தமிழக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
ஒடிஸாவைச் சேர்ந்தவர்: ஒடிஸா மாநிலம் நயாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்ய விரத சாஹூ. இவர் 1969 -ஆம் ஆண்டு பிறந்தார். 1997 -ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றார். மாநில போக்குவரத்து ஆணையாளர் உள்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.