சென்னை: நடிகர் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கான இணையதளத்தில் 48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான 'கூகுள் அனலிடிக்ஸ் டேட்டா' விபரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
நடிகர் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியானது கடந்த 21-அம தேதி அன்று மதுரை ஒத்தக்கடையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், கமலால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அதே சமயம் மிகச்சரியாக அன்று இரவு 07.27 அன்று கட்சியின் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.
சரியாக இணையதளம் துவங்கப்பட்டு 48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர் தளத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்தியா தவிர்த்து அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் இணையதளத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்
ஆனால் பதிவு செய்து கொண்டுள்ளவர்களில் எத்தனை பேர் இந்தியாவில் வாக்குரிமை பெற்றுள்ளவர்கள் என்பது குறித்து விபங்கள் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

வாட்ஸ்ஆப்பில் பெண்ணுடன் பேசியதாக சந்தேகம்! இளைஞர் மீது சிறுநீர் கழித்துக் கொடூரம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


