

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர் டிடிவி தினகரன் ஆகியோருக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்பொழுது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.
இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பொழுது சோதனையிகள் ஈடுபட்ட அதிகாரிகள் மூன்று அறைகளை சீல் வைத்துச் சென்றனர்.இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழனன்று மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர். முன்பு சீல் வைக்கப்பட்ட அறைகளில் தற்பொழுது ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்ய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயா தொலைக்காட்சியின் பழைய அலுவலகத்திலும் சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், போயஸ் கார்டன் சோதனைகள் பரபரப்பினைக் கூட்டியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.