சென்னை: டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு நேர்காணல் மூலம் சரியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவது வழக்கம்.
இந்த நேர்காணல்களை டி.என்.பி.எஸ்.சி தலைவர் உள்ளிட்ட தேர்வாணைய குழு உறுப்பினர்கள் மேற்கொள்வது வழக்கம். அதில் இரு குழுக்களாக அவர்கள் பிரிந்து செயல்படுவார்கள்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இனி ஒரு குறிப்பிட்ட நேர்காணலை நடத்தவுள்ள தேர்வாணைய குழு உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவார்கள். அதிலும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் எந்தக் குழுவில் இடம்பெறுவார் என்பதும் குலுக்கல் மூலமே தேர்வு செய்யப்படுவார்.
இதன்மூலமாக நேர்காணல்களில் வெளிப்படைத்தன்மையை கைக்கொள்ள முடியும் என்று நம்புவதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



