மேட்டூரில் எச்சரிக்கையை மீறி காவிரியில் குளிக்கச் சென்ற 6 பேர் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 118 அடியாக உயர்ந்தது. விரைவில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 88.73 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே அணை நிரம்பினால் மொத்த உபரி நீரும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும்.
காவிரி கரையோரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்த வேளையில், மேட்டூர் அருகே ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சேலம் மேட்டூருக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. காவிரி ஆற்றின் அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுக்கக் கூடாது என்று சேலம் மாவட்ட ஆட்சியர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


