தமிழகத்தில் கோயில்களில் அகல் விளக்கேற்றத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், மானாமதுரையில் 20 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. மேலும், தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.
மண்பாண்டம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மானாமதுரை பகுதி தான். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் இப்பகுதியில் கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மை ஆகும். கர்நாடக இசையில் முக்கிய பங்காற்றும் கடம் இந்தியாவில் மானாமதுரையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மேலும், இங்கு ஆண்டுதோறும் சீசனுக்கு தகுந்தவாறு மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக கோயில்களில் விளக்கேற்ற பயன்படுத்தப்படும் மண் அகல் விளக்குகள் மானாமதுரை பகுதியில் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன.
வெளி மாவட்ட வியாபாரிகள் மானாமதுரையில் மண்பாண்டத் தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுத்து அகல் விளக்குகளை கொள்முதல் செய்து, தங்கள் பகுதிகளில் விற்பனை செய்வர். இதனால் மானா
மதுரையில் ஆண்டு முழுவதும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெறும். இப்பணியில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தமிழகத்தில் கோயில்களில் பெண்கள் விளக்கேற்றி வைத்து வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கோயில் வாசல்களிலும் கோயில்களுக்கு உள்ளேயும் அகல் விளக்குகள் திரி போட்டு விற்கப்படும்.
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் விற்பனை செய்யப்படும் விளக்குகள் மானாமதுரையில் தயாரிக்கப்பட்டவையாகும். கடந்த சில மாதங்களுக்கு முன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோயில்களில் கோயில் பிரகாரங்களில் விளக்கேற்ற அரசு தடை விதித்தது. இதனால் கோயில்களில் இருந்த விளக்கு விற்பனை செய்யப்படும் கடைகள் மூடப்பட்டு விட்டன.
கோயில்களுக்கு வெளியிலும் விளக்கு விற்பனை செய்வது குறைந்துவிட்டது. இதனால் மானாமதுரையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்த அகல் விளக்குகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









