ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எம்.பி.பி.எஸ்.: ஜூலை 30-இல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 1:33 am IST

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அரசு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கி புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்தது. இதன் காரணமாக அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இந்த வழக்கை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்குத் தடை விதித்தது.
இதனையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மீண்டும் தொடங்க உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 516 எம்.பி.பி.எஸ்., 715 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 ஆகிய தேதிகள் நடைபெறும். விரிவான கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org  ஆகிய இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.