ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

துப்பாக்கிச் சூடு சம்பவம்: முன்னாள் ஆட்சியர், டிஐஜியிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் ஆகியோரிடம் தேசிய

News image
Updated On :5 ஜூன் 2018, 7:33 pm

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அம்மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் மதுரை சரக டிஐஜி பிரதீப்குமார் ஆகியோரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பிரபு தத்தா பிரசாத் மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாக மதுரை விமான நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றில் தூத்துக்குடியின் முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பிரபு தத்தா பிரசாத் விசாரணை நடத்தினார். செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இதேபோல தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மே 23ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மதுரை சரக டிஐஜி பிரதீப்குமாரிடமும் விசாரணை நடைபெற்றது. அவரிடம் துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.