மதுரை: கர்நாடகாவுக்கு சென்று முதல்வர் குமாரசாமியைச் சந்தித்ததன் மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துத் தெரிவித்துளார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை கடந்த திங்களன்று சந்தித்து காவிரி நீர் திறந்து விடுவது குறித்து பேச்சுவார்தை நடத்தினார். விவசாயிகளின் பிரதிநிதியாக தான் கர்நாடகா வந்து குமாரசாமியை சந்தித்ததாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் கர்நாடகாவுக்கு சென்று முதல்வர் குமாரசாமியைச் சந்தித்ததன் மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்துத் தெரிவித்துளார்
மதுரையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கமல் தனிப்பட்ட முறையில் தாராளமாக பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்திக்கலாம். தமிழகத்திற்கு தண்ணீர் தர இ யலாது என்று பிரசாரம் செய்த அவரை ஆராதிக்கலாம். ஆனால் மக்கள் பிரதிநிதியாக, விவசாயிகளின் பிரதிநிதியாக சென்று, சந்திப்பதும்,ஏற்கனவே முடிந்து போன விஷயமாக காவிரி ஆணைய அறிவிப்பு இருக்கும் பொழுது, ஏதோ கர்நாடக முதல்வர் குமாரசாமியின் கைகளில் தான் இதற்கு தீர்வு இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கு வதும் சரியல்ல. இதன்மூலம் தமிழக மக்களை கமல் இழிவு படுத்தி விட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


