போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தையா (82) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த காயப்பட்டியைச் சேர்ந்த இவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த சாத்தையாவுக்கு புதன்கிழமை நள்ளிரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை அதிகாரிகள், சாத்தையாவை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக, கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கே.ஜி. அருண்ராஜ்
இதுதான் ஆய்வு! ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே? மாணவர் விடுதியில் ஆட்சியர் கேள்வி!






