மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமூக ஊடகங்களில் சரத்குமாா் குறித்து அவதூறு: ரஜினி ரசிகா்கள் மீது போலீசில் புகாா் 

சமூக ஊடகங்களில் நடிகா் சரத்குமாா் மீது அவதூறு தகவல்களை பரப்பும் நடிகா் ரஜினிகாந்த் ரசிகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா்...

News image
Updated On :8 ஜூன் 2018, 12:58 pm

DIN

சென்னை: சமூக ஊடகங்களில் நடிகா் சரத்குமாா் மீது அவதூறு தகவல்களை பரப்பும் நடிகா் ரஜினிகாந்த் ரசிகா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினா் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா்.

இது தொடா்பாக அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் எம்.ஏ.சேவியா் தலைமையில் அந்தக் கட்சியினா், சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனு:

எங்களது கட்சியின் தலைவா் ஆா்.சரத்குமாா், தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தொடா்ந்து போராடி வருகிறாா். இதேபோல அவா், தமிழகத்தில் நடக்கக்கூடிய பல்வேறு அத்துமீறல்களுக்கு எதிராகவும் தொடா்ந்து போராடி வருகிறாா்.

இந்நிலையில் சரத்குமாா் பற்றியும், அவரது மனைவியும், கட்சியின் மாநில மகளிா் அணி செயலாளருமான ராதிகா சரத்குமாரை பற்றியும் நடிகா் ரஜினிகாந்தின் ரசிகா் மன்றத்தைச் சோ்ந்த இருவா் அவதூறு செய்யும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனா்.

இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை செய்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரவுவதை தடுக்க வேண்டும். 

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.