காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பிளாஸ்டிக் தீமைகள் குறித்து 32 மாவட்டங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம்

பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து 32 மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து 32 மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் கே.சி.கருப்பணன் வெளியிட்ட அறிவிப்புகள்: சூழல் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரும் வகையில் தேசிய பசுமைப் படை மற்றும் சூழல் மன்ற மாணவ, மாணவிகளுக்கு விநாடி-வினா, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய மூன்று இனங்களில் எட்டாம் வகுப்புக்குக் கீழ் மற்றும் எட்டாம் வகுப்புக்கு மேல் என இரண்டு பிரிவுகளாகச் சூழல் போட்டிகள் நடத்தப்படும். 
மேற்கூறிய மூன்று இனங்கள் மற்றும் இரண்டு பிரிவுகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்டத்துக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூ.64 லட்சம் செலவில் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும். மேலும், சூழல் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்லப்படுவர்.
பிளாஸ்டிக் தீமைகள் குறித்து மாணவர்களும், பொதுமக்களும் புரிந்துணர்வைப் பெறும் வகையில் மாவட்டங்களில் 20 இடங்களில், வாகனங்கள் மூலம் கலைக் குழுக்களின் பங்களிப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தலா ரூ.2 லட்சம் வீதம் 32 மாவட்டங்களில் மொத்தம் ரூ.64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
கும்மிடிப்பூண்டி மற்றும் திருப்பூர் (தெற்கு) ஆகிய இரண்டு மாவட்ட அலுவலகங்களுக்கு வாரிய நிதியிலிருந்து ரூ.4 கோடி செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களின் உடல் நலனைக் காக்கும் பொருட்டு 45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தலா ஒரு நபருக்கு ரூ.3,000 செலவில் முழு உடல் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கு ரூ.15 லட்சம் செலவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.