பிளஸ் 2 தேர்வு: புழல் சிறையில் 73 கைதிகள் எழுதினர்
தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை, புழல் மத்திய சிறையில் 73 கைதிகள் எழுதினர்.


தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை, புழல் மத்திய சிறையில் 73 கைதிகள் எழுதினர்.
கடந்தாண்டு தமிழக சிறையில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 95 கைதிகள் எழுதினர். அதில் 85 பேர் தேர்ச்சி பெற்றனர். நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதுவதற்கு 103 கைதிகள் அனுமதி பெற்றிருந்தனர்.
இவர்களுக்காக புழல் மத்திய சிறையில் மட்டும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்காக வேலூர், கடலூர், சேலம், திருச்சி, மதுரை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் இருந்து கைதிகள் இரு நாள்களுக்கு முன்பே பலத்த பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கடந்தாண்டு தமிழ் தேர்வில் தோல்வியடைந்தவர்களும், இந்தாண்டு புதிதாக தேர்வு எழுதுகிறவர்களும் என 73 பேர் தமிழ் முதல் தாள் தேர்வை எழுதினர். மீதி 30 பேர் வழக்கு விசாரணை, உடல்நலக்குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத முடியவில்லை என சிறைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு எழுதியவர்களில் 11 பேர் புழல் சிறைக் கைதிகள், 62 பேர் பிற மத்திய சிறை கைதிகள். கைதிகள் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை சிறைத் துறை டி.ஐ.ஜி. ஏ.முருகேசனும், புழல் சிறைக் கண்காணிப்பாளர் பி.சூசை மாணிக்கமும் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...