மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிறந்த நாள் வாழ்த்து 

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 5:35 am

DIN

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 65ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். அப்போது மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தார்.

மேலும் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘சகோதரர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக சென்னையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்து புதுவை முதல்வர் நாராயணசாமியும் வாழ்த்து கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.