சென்னை: மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் அதனை முடிவு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வியாழன் அன்று நடந்தது.அப்பொழுது மாணவர்கள் மத்தியில் கமல் பேசியதாவது:
அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். வெறுமனே வேடிக்கை பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டாதவன். பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் அதனை மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நமது வீட்டுச் சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்கத் தயங்க வேண்டும்? மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து நேர்மையாக எடுக்கும் முடிவு. அப்படி பார்த்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும். மய்யம் என்பதை தராசின் நடுவில் உள்ள முள் போன்று நீங்கள் கருதலாம்.
இவ்வாறு கமல் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல் பாடல், வெளியீட்டு அப்டேட்டை வெளியிட்ட ஹாய் படக்குழு!

மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை பாஜக அனுமதிக்காது: அமித் ஷா

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


