47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு! 

அதிமுகவில் 19 அமைப்புச் செயலாளாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்.

News image
Updated On :16 மார்ச் 2018, 4:21 pm

DIN

சென்னை: அதிமுகவில் 19 அமைப்புச் செயலாளாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்

அதிமுகவில் ஏற்கனவே நிரப்பபட வேண்டிய நிர்வாகிகள் மற்றும் கூடுதல் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக  வழி நடத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் அறிவித்துள்ளனர்   

அதன்படி பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், சீனிவாசன், செங்கோட்டையன், ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன், சி.வி,சண்முகம்,மைத்ரேயன், ஜெயக்குமார், சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட 19 பேர் புதிய அமைப்புச் செயலாளாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் அதிமுகவின் துணைக் கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தென் சென்னை, வேலூர் கிழக்கு, தஞ்சாவூர், திருச்சி, தென் சென்னை, தேனி மற்றும் விழுப்புரம்   உள்ளிட்ட மாவட்ட செயலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.