சென்னை: அரசியல் நோக்கத்துடன் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று ராம ராஜ்ய ரத யாத்திரை அனுமதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
வி.ஹெச்.பி அமைப்பின் ஆதரவுடன் நடத்தப்படும் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடத்திய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அரசியல் நோக்கத்துடன் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு என்று ராம ராஜ்ய ரத யாத்திரை அனுமதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாயன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.
இவ்வாறு அவர் தமிழக அரசினை விமர்சனம் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

வாட்ஸ்ஆப்பில் பெண்ணுடன் பேசியதாக சந்தேகம்! இளைஞர் மீது சிறுநீர் கழித்துக் கொடூரம்!

திருவல்லிக்கேணி, எழும்பூர், தி. நகரில் விஜய் நாளை பிரசாரம்!
வீடியோக்கள்

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை


