ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இஸ்ரோ தலைவராக சிவன் பெறும் முதல் வெற்றி

ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பொறுப்பேற்ற பின்னர் கிடைத்த முதல் வெற்றியாகும்.

News image
Updated On :29 மார்ச் 2018, 7:19 pm

ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பொறுப்பேற்ற பின்னர் கிடைத்த முதல் வெற்றியாகும்.
இஸ்ரோ தலைவராக கடந்த ஜனவரி 10-ஆம் தேதி சிவன் பொறுப்பேற்றார். அதன் பிறகு அவருடைய தலைமையில் அனுப்பப்படும் முதல் திட்டம் ஜி.எஸ்.எல்.வி.-எஃப் 08 ராக்கெட் ஏவும் திட்டமாகும். எனவே, இந்த வெற்றி சக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தொடர்ந்து, இவருடைய தலைமையில் அடுத்தடுத்து பல்வேறு செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. அடுத்ததாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 செயற்கைக்கோளை அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி41 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவல்தொடர்புக்கான ஜிசாட்-2 செயற்கைக்கோள், பிரஞ்ச் கயானா விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
நிலவை ஆய்வு செய்ய...அடுத்ததாக, நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ வரும் அக்டோபரில் விண்ணுக்கு அனுப்ப உள்ளது. 3,290 கிலோ எடைகொண்ட இந்த விண்கலம் ஜி.எஸ்.எல்.வி.-எஃப்10 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது.
தொடர்ந்து கிராமப்புறங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்த கிராம வள மையங்களுக்கு உதவும் வகையிலான ஜிசாட்-29 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.