கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கும் மத்திய அரசு: கவிதையில் சாடிய வைரமுத்து!

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கும் மத்திய அரசு: கவிதையில் சாடிய வைரமுத்து!

சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பினை சமயத்தில் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆறு வார கால அவகாசம் அளித்திருந்தது. அநத அவகாசம் வியாழனுடன்  நிறைவடைய உள்ளது. ஆனால் இன்னும் இது தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பே  எங்கள்

உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது.

மத்திய அரசோ

கிழிந்த வேட்டியையும்

பறிக்கப் பார்க்கிறது.

உழவர்கள் வேட்டி இழந்தால்

நாடு நிர்வாணமாகி விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com