‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

காலா அரசியல் படம் இல்லை: நடிகர் ரஜினி காந்த்

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் காலா அரசியல் படம் இல்லை  என்று கூறினார்.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

காலா பட இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் காலா அரசியல் படம் இல்லை  என்று கூறினார். ஆனால்  படத்தில் அரசியல் இருக்கிறது என தெரிவித்தார். 
மேலும் இந்த  விழா  இசை வெளியீட்டு விழா போலில்லாமல் காலா படத்தின் வெற்றி விழா போல் தெரிவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும் என்றும் தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்நாள் கனவு என கூறினார்.
சிவாஜி வெற்றி விழாவில் பேசிய கருணாநிதியின் குரலை மறக்க முடியாது என்றும் 75 ஆண்டுகளாக தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்  கருணாநிதியின் குரலை கேட்க ஆர்வமாக  காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் எனவும்  கருணாநிதி விரைவில் குணமடைவார் எனவும் தெரிவித்தார்.
வாழ்க்கையில் புத்திசாலியுடன் பழகலாம் ஆனால் அதிபுத்திசாலியுடன் பழகக்கூடாது  மேலும் நல்லவனாக இருக்கலாம் மிகவும் நல்லவனாக இருக்கக்கூடாது என்றார்.

மேலும் யார் என்ன சொன்னாலும் எனது பாதையில் பயணம் தொடரும் என கூறினார். 

லிங்கா படத்திற்கு பிறகுதான் வயதிற்கு தகுந்த கதாபாத்திரங்கள் மற்றும் வயதிற்கு ஏற்ற கதாநாயகிகளுடன் நடிக்க வேண்டும் என்று உணர்ந்தேன் என்றார்.

 ஏவிஎம், ஜெமினி போன்ற பாரம்பரியமிக்க சினிமா தயாரிப்பு நிறுவனம் சினிமா தயாரிப்பை கைவிட்ட நிலையில் தயாரிப்பாளர் தாணு தனது கடும் உழைப்பினால் வெற்றி பெறுகிறார் அவருக்கு எனது பாராட்டுகள் என்றும் கூறினார்.
லிங்கா படம் சரியாக போகாததால் லிங்காதான் எனது கடைசி படம் என்று சிலர் கூறினர். 

கடந்த  40 ஆண்டுகளாக நான் நடித்து முடித்து விடுவேன் என  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.