பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தல் முருகன், கருப்பசாமி ஆகியோரின் நீதிமன்ற காவல் மேலும நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி, காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழக தற்காலிக ஆசிரியர் கருப்பசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ்வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோர் விருதுநகர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரின் நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மே 28 ம் தேதிக்கு ஒத்திவைத்தும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


