மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததால், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கும் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளை அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதில் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் ஜொலித்து வந்தன.
இதனால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் நாமக்கல் தனியார் பள்ளிகளை நாடினார்கள். அதுவும், தனியார் பள்ளிகளின் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளின் பட்டியலைப் பார்த்து பார்த்து சேர்ந்தார்கள்.
கல்வித் தரத்தின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் புகழ் அடைந்தது. ஏராளமான பெற்றோர் கோடை காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் வீட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு தங்கி தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்தனர்.
இதனால், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே அதாவது கல்வி ஆண்டு முடியும் முன்பே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும் நிலைமை ஏற்பட்டது.
ஆனால், இந்த நிலை வெகு ஆண்டுகளுக்கு நீடிக்கவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் அடிப்படை என்று மத்திய அரசு ஒரு நிபந்தனையை விதித்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், நாமக்கல் தனியார் பள்ளிகளுக்கு மவுசு குறைந்தது.
தற்போதைய புள்ளி விவரம் சொல்வது என்னவென்றால், தற்போது இந்த மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வெழுதியிருக்கும் 22,511 மாணாக்கர்தான் 2019ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
அதாவது, பள்ளிக் கல்வித் துறையின் தகவலின்படி பார்த்தால் 2017ம் ஆண்டு இந்த மாவட்டத்தில் 29,643 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்கள். ஆனால், இந்த ஆண்டு வெறும் 26,343 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர். இது அடுத்த ஆண்டில் மேலும் குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2016ல் 27,294 ஆகவும், 2015ல் 31,020 ஆகவும், 2014ல் 31,527 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு போட்டித் தேர்வுகளின் காரணமாக, பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் ஏராளமான மாணவ, மாணவிகள் பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்விக்கு மாறி விடுகிறார்கள் என்றும் தலைமை கல்வித் துறை அதிகாரி கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


