தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தொடர் மழை காரணமாக சென்னையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 நவம்பர் 2018, 4:06 pm

DIN

சென்னை: தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரையில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய் இரவில் இருந்து விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. 

புதன்கிழமை காலையில் இருந்தும் சென்னை, காஞ்சிபுரத்தில் அநேக பகுதிகளில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. 

வானிலை ஆய்வு மையமும் அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை தொடரும்; மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்துக்குக் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.    

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சென்னை,காஞ்சிபுரத்தில்  நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.